திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் எம்.காப்பிலியப்பட்டியை சார்ந்தவர் சிக்கனன். இவரது மகனின் பெயர் மணிவேல் (24). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சார்ந்த 13 வயதுடைய சிறுமி அங்குள்ள பள்ளியில் 9 ம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
மணிவேலிற்கும் 13 வயதுடைய சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறவே., இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் பேச்சானது பின்னர் திருமணம் என்ற ஆசை வார்த்தையை மணிவேல் கூறியுள்ளார்.
இந்த ஆசை வார்த்தைக்கு பின்னர் மாணவி மயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மாணவியை தேடியும் காணவில்லை என்பதால்., விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட பின்னர் சிறுமிக்கும்., மணிவேலுக்கும் இடையே இருந்த காதல் பழக்கம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணிவேல் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இவர்கள் இருவரும் வெளியூரில் இருப்பதை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவியை மீட்டனர். மேலும்., மாணவியிடம் விசாரணை மேற்கொண்ட சமயத்தில்., திருமண ஆசை காட்டி மணிவேல் மாணவியை பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மணிவேலின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் உடனடியாக அவனை கைது செய்து., விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., மாணவியை தனியார் காப்பகத்தில் அனுமதித்து., அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.