இமயமலையில் காணாமல் போன பிரித்தானியர் சடலமாக மீட்பு!

உலகின் 9 வடக்கு உயரமான இமயமலையில் ஏறிக்கொண்டிருந்த போது மாயமான இருவர், 16 நாட்களுக்கு பின் 5900 அடி உயரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவை சேர்ந்த 30 வயதான பல்லார்டு மலையேறுவதில் மிகவும் திறமையானவர். இவர் தன்னுடைய இத்தாலி நண்பரான டேனிலை நார்டி (42) உடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தானின் மாகாணத்தில் அமைந்துள்ள இமயமலையில் ஏறும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

கடந்த 24-ம் திகதி, உலகிலேயே 9 வது உயரமான இமயமலையில், 20,700 அடி உயரத்தில் ஏறிக்கொண்டிருக்கும் போது, கட்டுப்பாட்டு அறைக்கும் இவர்களுக்கும் இடையிலான இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து இரண்டு பேரையும் தீவிரமாக தேடும் முனைப்பில் பாகிஸ்தான் அதிகாரிகள் ஈடுபட ஆரம்பித்தனர். அதேசமயம் இத்தாலியில் இருந்து 4 பேர் கொண்ட ராணுவ குழு பாகிஸ்தானிற்கு விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட ஆரம்பித்தது.

இந்த நிலையில் அவர்கள் இவருடைய உடலையும் 5900 அடி மலை உயரத்தில் இத்தாலி ராணுவ வீரர்கள் கண்டுபிடித்திருப்பதாக பாகிஸ்தானில் உள்ள இத்தாலி தூதரக அதிகாரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெரும் வேதனை தெரிவித்துள்ள பல்லார்டுவின் தந்தை ஜிம், என்னுடைய மகனை நினைத்து அவனுடைய தாய் அலிசன் ஹர்கிரவெஸ் நிச்சயம் பெருமைப்படுவார்.

1995-ம் ஆண்டு அதே இமயமலையில் தனி ஒரு ஆளாக மலையேறிக்கொண்டிருந்த போது தன்னுடைய 33 வயதில் அவர் உயிரிழந்தார். அதே இடத்தில தான் தற்போது எங்களுடைய மகனும் உயிரிழந்துள்ளான் என தெரிவித்துள்ளார்.