அமெரிக்காவில் குழந்தைகளின் ஆபாச படத்தினை தரவிறக்கம் செய்த இந்திய விமானி கைது செய்யப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் அவரது அமெரிக்க விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த விமானி லாஸ் ஏஞ்சல்ஸில் தரையிறங்கியவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட விமானியின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு அமெரிக்க விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி அவர் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 மாதங்களாக இவரது இணையதள பயன்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், இவர் அமெரிக்கா சென்ற 15 நிமிடத்தில் கைது செய்யப்பட்டு விசார ரத்து செய்யப்பட்டுள்ளது.