இரானில் வணிக வளாகத்தில் பலருக்கும் மத்தியில் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட தம்பதியினர் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இரானின் வடக்கு மாகாணத்தில் இருக்கும் அராக்கில் பெண் ஒருவருக்கு, ஆண் ஒருவர் மோதிரம் அணிவிப்பது போன்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.
அந்த வீடியோவில் ரோஜா இதழ்களால் ஆன வளையத்திற்குள் நிற்பது போன்று இருந்தது. அவர் மோதிரத்தை அணிவித்தவுடன், அந்த பெண் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து கட்டி அணைக்கிறார்.
இது இஸ்லாமிய மத கோட்பாடுகளுக்கு முரணாக நடந்து கொண்டதாக அவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரானின் இஸ்லாமிய சட்டங்களின்படி, ஆண் பெண் பொது இடங்களில் ஒன்றாக இருப்பதும், மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதும் குற்றமாகும்.
இதனால் பொதுமக்கள் இது குறித்து பொலிசாரிடம் கோரிக்கை வைத்த பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டதாக அந்த மாகாணத்தின் துணை பொலிஸ் ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பல்வேறு விதமான விவாதங்களை எழுப்பி வருகிறது குறிப்பிடத்தக்கது.