அனைத்து வயதினரும் சந்திக்கும் பிரச்சினை தான் பாத எரிச்சல். இது சிலருக்கு இரவு நேரங்களில் வருவதுண்டு.
இந்த எரிச்சல் உணர்வானது மிதமானது முதல் தீவிரமானது வரை என இருக்கும்.
பாதங்களில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டால், அவர்களது பாதங்கள் வீங்கியோ, சிவந்தோ, தோல் உரிந்தோ, சரும நிறம் சற்று மாறுபட்டோ, தாங்க முடியாத எரிச்சலையோ சந்திக்க நேரிடும்.
இப்பிரச்சனையில் இருந்து விடுபட, ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அவை என்ன என்பதை பார்ப்போம்.
- ஒரு அகலமான வாளியில் குளிர்ச்சியான நீரை நிரப்பி, அந்நீரில் பாதங்களை சில நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் சிறிது இடைவெளி விட்டு, மீண்டும் குளிர்ந்த நீரில் ஊற வையுங்கள். இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்யுங்கள். ஆனால் ஐஸ் கட்டிகளையோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்த நீரையோ நேரடியாக பாதங்களில் பயன்படுத்தாதீர்கள்.
- டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.
- ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிறிது எப்சம் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரில் பாதங்களை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
- 2 டீஸ்பூன் மஞ்சளை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் 2 முறை குடிக்க வேண்டும்.
- 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, எரிச்சல் உணர்வு உள்ள பாதங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 1-2 முறை என சில நாட்கள் பின்பற்ற தீர்வு கிடைக்கும்.
- ஒரு அகலமான வாளியில் 1 1/2 கப் எப்சம் உப்பு போட்டு, வெதுவெதுப்பான நீர் ஊற்றி கலந்து, அந்நீரினுள் பாதங்களை 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு ஒருமுறை என சில நாட்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
- வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலில் 1 டீஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து கலந்து, அந்த எண்ணெயால் பாதங்கள் மற்றும் கால்களில் தடவி 10-15 நிமிடம் மசாஜ் செய்து வாருங்கள்.
- ஒரு கையளவு பாகற்காய் இலைகளை நீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை பாதங்களில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் பின்பற்றி வந்தால், பாதங்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வு நீங்கும்.
- ஒரு கையளவு தைம் கீரையை 2 பௌல் நீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு அகலமான வாளியில் சுடுநீரை நிரப்பிக் கொள்ள வேண்டும். மற்றொரு வாளியில் குளிர்ந்த நீரை நிரப்பிக் கொண்டு ஒவ்வொரு வாளியிலும் பௌலில் ஊற வைத்துள்ள தைம் கீரையை நீருடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு பாதங்களை முதலில் சுடுநீர் நிரப்பிய வாளியில் 3-5 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீர் நிரப்பிய வாளியில் ஊற வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு ஒருமுறை செய்து வர பாதங்களில் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கலாம்.
மசாஜ்
பாதங்களுக்கு சில எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்வதன் மூலமும், பாதங்களில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அசௌகரியத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
பாதங்களில் மசாஜ் செய்வதன் மூலம், பாதங்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதுவும் வெதுவெதுப்பான தேங்காய், ஆலிவ் அல்லது கடுகு எண்ணெயால் பாதங்களுக்கு குறைந்தது 10 நிமிடம் மசாஜ் செய்யுங்கள்.
அதுவும் இரவு தூங்கும் முன் மசாஜ் செய்து வருவது மிகவும் நல்லது.