இந்தியாவில் நேற்று மாலை 5 மணியளவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் திகதிகள் அறிவிக்கப்பட்டன.
7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பை வெளியிட்டார்.
அந்நேரம் ராகு காலம் என்பதால் பல கட்சிகள் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது, அதாவது 4.30 மணி முதல் 6 மணிவரை ராகுகாலமாம்.
பல கட்சிகள் நல்ல நேரம் பார்த்து கூட்டணி அறிவிப்பு முதல் பல நல்ல திட்டங்களை, ஏன் பதவியேற்பை கூட நடத்துகின்றன.
குறிப்பாக தென் மாநிலங்களை சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் நல்ல நேரம், ஜோதிடர்களின் பரிந்துரையின் பேரில் கட்சி மற்றும் ஆட்சி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் ராகு கால அறிவிப்பால் பலரும் என்ன நடக்கும் என கையைபிசைந்து கொண்டு பதற்றத்தில் இருக்கிறார்களாம்.