உலகின் முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் பல்வேறு சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றது.
இதன் மற்றுமொரு அங்கமாக ஆன்லைன் கல்வி சேவை ஒன்றினையும் அறிமுகம் செய்யவுள்ளது.
இதற்கு We Think Digital எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இச்சேவையானத ஊடாடு தொழில் நுட்பத்தினை (Interactive) அடிப்படையாகக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்ச்சி முதன் முதலாக சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டளவில் ஆசிய – பசுபிக் பிராந்தியத்திலிருந்து ஒரு மில்லியன் வரையான மக்களுக்கு இது தொடர்பான பயிற்சிகளையும் வழங்க பேஸ்புக் நிறுவனம் தயாராகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.