‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’

மிளகுக்கு, ‘கறுப்புத் தங்கம்’ என்றோர் பெயர் உண்டு. எண்ணற்ற சத்துக்களைக் கொண்டது. ‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்ற பழமொழி இதன் நச்சு நீக்கும் தன்மையைச் சொல்லும்.

OLYMPUS DIGITAL CAMERA

மிளகில், பைப்பரின் (Pipirine) எனும் சத்து உள்ளது. மிளகின் வாசனைக்கு இதுதான் காரணம்.

மிளகைக் காயகற்ப மூலிகையாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். திரிகடுகத்தில் மிளகுக்கும் இடம் உண்டு.

தும்மல், மூச்சடைப்பு, உடல் பருமன் எனப் பல்வேறு பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். மிளகுப்பொடியை அப்படியே சமையலில் பயன்படுத்துவதே சிறந்தது. தினமும் மிளகைச் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மிளகு சாதம் சாப்பிடலாம். மிளகு சூப், மிளகு ரசம் மழை மற்றும் குளிர் காலங்களில் பருகலாம்.

மிளகு காரமானது. எனவே, அல்சர் இருப்பவர்கள் மிளகைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். தொண்டைக்கட்டு இருப்பவர்களுக்கு நல்ல நிவாரணம் தரும்.