கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் பணிக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் சுமார் 100 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து., ஆபாச படமெடுத்து மிரட்டி நகை மற்றும் பணங்கள் பறித்தும்., பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது.
இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக முதலில் சரிராஜா., சதீஸ் மற்றும் வசந்தகுமார் என்பவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது.
இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகினற்னர். இதுகுறித்து இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் கண்டனம் தெரிவித்து ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் I strongly condemn these monsters … மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் கொடுமைப்படுத்தியது வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது… இவர்களை பொது வெளியில் நடமாடவிடுவது சமூகத்திற்கு பேராபத்து என்று பதிவு செய்துள்ளார்.
I strongly condemn these monsters … மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் கொடுமைப்படுத்தியது வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது… இவர்களை பொது வெளியில் நடமாடவிடுவது சமூகத்திற்கு பேராபத்து..#arrestpollachirapists #arrestpollachirapists pic.twitter.com/eMCl6sP9W1
— G.V.Prakash Kumar (@gvprakash) March 11, 2019