இந்திய பிரதமர் மோடி புகைப்பட கலையில் ஆர்வம் கொண்டவர் என நமக்கு தெரியும். தனது டுவிட்டர் பக்கத்தில் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மற்றும் முக்கிய தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை அவ்வப்போது பதிவேற்றம் செய்து லைக்ஸ்களை அள்ளி குவிப்பது வழக்கம்.
அதே போல் இன்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘கம்பீரமான கிர் சிங்கம், அருமையான புகைப்படம்’ என கூறி ஒரு சிங்கத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சிலர் மோடி, கலையார்வத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாக அவரை பாராட்டி வருகின்றனர். சிலர், “மோடி பாராளுமன்ற தேர்தலில் பலர் தன்னை எதிர்த்த போதும் ‘எதையும் வெல்லும் குஜராத் சிங்கமாக நான் இருப்பேன்’ என குறிப்பிடவே அந்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளதாக கருத்துக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த புகைப்படத்தை கிர் பகுதியில் உள்ள வனச்சரகர் திபக் வாகர் எடுத்த புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.