மக்களின் கட்சி சார்ந்த விருப்பு, வெறுப்புகள், வாக்காளர்களின் ஆதரவு கிடைக்குமா, கிடைக்காதா, இது மெகா கூட்டணியா, பொருந்தா கூட்டணியா, போன்ற பல விமர்சனங்களும் கேள்விகளும் இருந்தாலும், பொதுவில் நின்று பார்க்கும்போது,
எடப்பாடி பழனிசாமியே வலிமையான கூட்டணியைக் கட்டமைத்துள்ளார் என்பது கட்சிகளின் முந்தைய தேர்தல் முடிவுகள் கூறுகிறது.
காட்சி ஊடகங்களில் எப்போதும் அதிமுகவைக் கடுமையாக விமர்சிக்கும் மூத்த பத்திரிகையாளர்கள் கூட, கூட்டணி விஷயத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் செயலாற்றலைப் பாராட்டவே செய்கிறார்கள். இதே வலிமையான கூட்டணியை எளிதாக அமைக்கும் வாய்ப்பு திமுகவுக்கும் பெருமளவில் இருந்தது.
குறிப்பாக, திமுக கூட்டணியில் தான் பாமக இடம்பெறும் எனும் எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பை உறுதி செய்யும் விதமாக காங்கிரஸ் செயல்தலைவர் வசந்தகுமார் இதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார். ஆனால் சீனியர்களை நம்பாமல் தன் மருமகனை நம்பிய ஸ்டாலின், கிடைத்த நல்ல வாய்ப்பை தவறவிட்டார்.
அதன் பிறகு திமுக கோட்டை விட்டது தேமுதிகவை, விஜயகாந்தை உடல்நலம் விசாரிக்கச் சென்ற ஸ்டாலின் அவருடன் அரசியல் பேசினார் என்பதை வெளிப்படையாக அறிவித்து நேசக்கரம் நீட்டியிருந்தால், சந்திக்க வந்த தேமுதிகவினரை துரைமுருகன் மட்டம் தட்டாமல் இருந்திருந்தால், ஒருவேளை ஸ்டாலின் எதிர்பார்த்த தேமுதிக இன்று திமுக கூட்டணியில் இருந்திருக்கக் கூடும்.
எது எப்படியோ, வலிமையான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி அமைத்துவிட்டார். வாய்ப்புகள் கிடைத்தும் வலிமையான கூட்டணி அமைக்க திமுக தவறிவிட்டது. இதனால் திமுக தொண்டர்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர்.
ஏனெனில் மூன்று சதவீத வாக்குகள் கூட இல்லாத, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 7 மக்களவை ஒரு ராஜ்யசபா, 4 சதவீத வாக்கு வைத்துள்ள காங்கிரசுக்கு 10 தொகுதிகள் என வலுவில்லாத கூட்டணியை அமைத்து திமுக வாக்கு சதவீதத்தில் பலமிழந்து, பெயரளவில் மட்டுமே பலத்துடன் காணப்படுகிறது. இதனால் வெற்றி பெறுவோமா என்ற சந்தேகத்தில் பெருமபாலான திமுக தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.