தடம் புரண்ட எக்ஸ்பிரஸ்!! ஊழியர் செய்த காரியத்தால் பரபரப்பு!

பராமரிப்பு பணிக்காக தாம்பரம் பகுதியில் உள்ள மூன்றாவது முனையத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயிலை கொண்டு சென்றனர். தாம்பரம் ரெயில் நிலையத்தில் 11-வது பிளாட்பாரத்தில் அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஊழியர் ஒருவர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பின்புறமாக இழுப்பதற்காக டீசல் என்ஜினை ஓட்டி வந்தார். வழக்கத்தைவிட சிறிது வேகமாக டீசல் என்ஜின் வந்துள்ளது. எனவே, ரெயிலின் அருகே நிறுத்த முடியாமல் அதன் கடைசி பெட்டி மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இதனால், அந்த ரெயில் பெட்டி சேதமடைந்தது. மேலும், அந்த ஒற்றை ரயில் பெட்டியின் சக்கரங்கள் தடம்புரண்டு தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியுள்ளது.

இந்த சம்பவத்தை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து அபாய சங்கு ஒலியை எழுப்பியுள்ளனர். இதனால், சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் மிக பெரிய அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னர், ஊழியர்கள் விரைந்து வந்து தடம் புரண்ட ரெயில் பெட்டியை மீட்டுள்ளனர். இதன் பிறகு ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து பார்வையிட்டுள்ளனர்.