பித்தம், கப நோய் போன்றவற்றைச் சரிசெய்யும். ஆனால், மிகக் குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.
50 மி.லி நல்லெண்ணையில், 10 காய்ந்த மிளகாய் சேர்த்து, நன்றாகச் சூடுபடுத்த வேண்டும். பின்னர், மிளகாயை நீக்கிவிட்டு, எண்ணெயை மட்டும் எடுத்து, தலைக்குக் குளித்துவந்தால் தலைவலி நீங்கும்.
அல்சர், அழற்சி, வாய்ப்புண் போன்றவை இருப்பவர்கள், காய்ந்த மிளகாய் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
மிளகாய் காரமானது என்பதால், அதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்த, சமைக்கும்போது இரண்டு பங்கு தனியா (மல்லி) சேர்த்துச் சமைக்க வேண்டும். எனவேதான், நம் முன்னோர்கள் ஒரு பங்கு மிளகாய்ப் பொடிக்கு, இரண்டு பங்கு மல்லிப் பொடி சேர்ப்பார்கள்.
காய்ந்த மிளகாய் வலியை நீக்கும் தன்மை கொண்டது. புளிச்சகீரை போன்றவற்றில் மிளகாய் சேர்த்து வதக்கிச் சாப்பிடலாம்.