மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த பாலாஜி!

கரூரில் இரண்டாவது திருமணம் செய்யவிருந்த மாப்பிள்ளையை முதல் மனைவியின் குடும்பத்தார் திடீரென தடுத்து நிறுத்தி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரை சேர்ந்த சீனிவாசன் என்பவருடைய மகள் பத்மப்ரியா (22). இவருக்கும் பல்லடத்தை சேர்ந்த பாலாஜி (30) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக காதல் திருமணம் நடந்துள்ளது.

இதற்கான வரவேற்பு நிகழ்ச்சி கரூர் ஆர்த்தி மகாலில் நேற்று நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென தங்களுடைய உறவினர்களுடன் அங்கு வந்த ராஜேந்திரன் (54) மற்றும் அவர் மனைவி மகாலட்சுமி (48), வரவேற்பு நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர்.

கடந்த, 2014 ஜூலை மாதம் 21ல் எங்கள் மகள் அபிராமிக்கும், பாலாஜிக்கும் திருமணம் திருமணம் நடந்து மூன்றரை வயதில் ஒரு குழந்தை இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பாக எங்களுடைய மகளை அடித்து வீட்டிற்கு விரட்டிவிட்டு தற்போது இரண்டாவது திருமணம் செய்கிறார் என கூறியுள்ளனர்.

இதனை கேட்டு பத்மப்ரியா உறவினர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் மண்டபமே பெரும் பரபரப்பில் இருக்க, விரைந்து வந்த பொலிஸார், பாலாஜி மற்றும் பத்மப்ரியாவை விசாரணைக்காக பொலிஸ் நிலையம் அழைத்து சென்றனர்.