பொட்டி பாம்பு போல் அடங்கும் பாக்கித்தான்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி இந்திய துணை ராணுவ படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில் 41 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தது.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என அமெரிக்காவிடம் பாகிஸ்தான் உறுதி அளித்துள்ளது.

பாகிஸ்தானில், தீவிரவாதிகளுக்கு அந்த நாடு அடைக்கலம் கொடுத்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். இந்தநிலையில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியுதவிகளை அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வந்ததால் பாக்கிஸ்தான் ஆட்டம் கண்டது.

புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய விமானி அபிநந்தன் பாக்கிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அப்போது இந்தியாவில் இருந்து கிளம்பிய எதிர்ப்பை பார்த்து அபிநந்தனை உடனடியாக பாக்கிஸ்தான் விடுவித்தது. ஆனாலும் பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் விதமாக செயல்பட்டனர். இதனையடுத்து பாக்கிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என சர்வதேச அரங்கில் அதிக அளவு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா சென்றுள்ளார்.

இதனையடுத்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரை தொடர்பு கொண்டு பேசினார். தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்போம், என பாகிஸ்தான் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.