பொள்ளாச்சி சம்பவம்! புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன்!

பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட காமக்கொடூர கும்பல் சமூகவலைத்தளங்கள் மூலம் 200க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி அவர்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் அந்த காமக்கொடூர மிருக கும்பலிடம் இளம்பெண் ஒருவர் சிக்கி தவித்து துடிதுடித்து கதறும் வீடியோ ஒன்று வெளியானது. மேலும் அதனை காண்போர் அனைவரின் உள்ளத்தையும் பதைபதைக்கும் வகையில், இரத்தம் கொதிக்கும் வகையிலும் இருந்துள்ளது. தற்போது இணையத்தில் அதிகம் பேசப்படும் விஷயமாக பொள்ளாச்சி கொடூர சம்பவம் இருந்துவருகிறது.

இந்தநிலையில் இந்த சம்பவத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண் பேசுவதுபோல இன்று காலையில் ஆடியோ வெளியானது. இதனையடுத்து பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன், பொய்யான தகவல்களை பரப்பி எங்கள் குடும்பத்திற்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அரசியல் ஆதாயத்திற்காக ஒருசிலர் தவறான தகவல்களைப் பரப்புவதால் எங்களுடைய குடும்பத்துக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள். இந்த விவகாரத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் சொல்லித்தான் நடவடிக்கை எடுத்தார்கள். அப்படியிருக்கையில், எதற்காக இப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

அரசியல் ஆதாயத்திற்காக தவறான தகவல் பரப்பி ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் மீதும், வழக்கை திசை திருப்ப முயற்சி செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனால் நாங்கள் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் இருக்கிறோம் என புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவிப்போரின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்திருக்கிறார்கள். யாராயுனும் தேவையின்றி பெண்ணின் குடும்பத்தினருக்கு மனவேதனை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி கூறியுள்ளார்.