சீமானுக்கு நேர்ந்த பரிதாபம்! சீமான் தம்பிகள் எடுத்த அதிரடி முடிவு!

நாம் தமிழர் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி வேறு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் ஆணையம், பல்வேறு விதமான விதிமுறைகளை வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், குறைந்த வாக்கு சதவீதத்தை பெற்ற கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் அளிக்க முடியாது என முடிவெடுத்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதன்காரணமாக, நாம் தமிழர், விசிக மற்றும் மதிமுக போன்ற கட்சிகளுக்கு அவைகளின் சின்னம் வழங்கப்பட மாட்டாது என கூறியுள்ளது. தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு மட்டும் தான் நிறைந்த சின்னத்திற்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

மூன்றாம் நிலை கட்சியான பாமக இந்த தேர்தலில் எதிர்பார்த்த வாக்கு சதவீதத்தை பெற்றால் மாம்பழம் சின்னம் தக்கவைக்கப்படும். நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்துள்ளது.

மேலும், தொண்ணுறு சதவீதம் தேர்தல்களில் நோட்டாவிற்கு கீழே வாக்கு பெற்றுள்ளது. எனவே, அதற்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தை தேர்தல் ஆணையம் றது செய்துள்ளது.

தினகரனுக்கு குக்கர் சின்னம் மறுக்கப்பட்டதை கிண்டலடித்து சீமானுக்கு சின்னம் பறிபோனது தமிழகத்தில் கேலிக்கூத்தாகியுள்ளது. மேலும், தற்பொழுது வேறொரு சின்னம் வழங்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு மனு நாம்தமிழர் கட்சி சார்பாக மனு கொடுக்கப்பட்டுள்ளது.