இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் விமானியை, அங்கிருந்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய விமானப்படையானது பாகிஸ்தான் எல்லையில் புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 27ம் திகதி பாகிஸ்தான் ராணுவம் F 16 ரக விமானத்தில் இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
அப்போது அவர்களை விரட்டி சென்ற இந்திய விங் கமாண்டர் அபிநந்தன், F16 விமானத்தில் சுட்டு வீழ்த்தினார். பதிலுக்கு அந்த விமானத்தில் பயணம் செய்த விமானியும் திருப்பி தாக்கினார்.
இதில் இரு விமானங்களும் சேதமடைந்ததை அடுத்து, உள்ளிருந்த விமானிகளும் பாராசூட் மூலம் வெளியில் குதித்தனர். பாகிஸ்தான் எல்லையில் விழுந்த விமானிகளை அங்கு நின்றுகொண்டிருந்த பாகிஸ்தான் பொதுமக்கள், சரமாரியாக தாக்கினர். அவர்கள் நாட்டு வீரரை அடையாளம் காண முடியாமல், இந்திய சீக்கிய வீரர் என நினைத்து தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இந்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதை அந்நாட்டு ராணுவம் அங்கீகரிக்கவில்லை எனவும், ஊடகங்கள் செய்தியை மறைக்க பார்ப்பதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
செவ்வாய்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனை உறுதிசெய்துள்ளார். ஆனால் அந்த வீரர் குறித்த தகவல் எதையும் அவர் வெளியிடவில்லை.
முன்னதாக இங்கிலாந்தில் வசித்து வரும், பாகிஸ்தான் வம்சாவளி வழக்கறிஞர் காலித் உமர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், மருத்துவமனையில் இறந்த ராணுவ வீரரின் பெயர் விங் கமாண்டர் ஹைதர் சஹ்பாஸ் அலி எனவும், அவர் பாகிஸ்தான் விமானப்படையின் 19வது ஸ்குவாட்ரானான செர்தில்சின் கமாண்டிங் அதிகாரியாக பணியாற்றியவர் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.