ராகுல் காந்தி அதிரடி பதில்.! 7 தமிழர்கள் விடுதலை.! அதிர்ச்சியில் தமிழகம்.!!

தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வை, அடுத்து வரும் மத்திய அரசு தமிழகத்திற்கு மட்டும் நீட் தேர்வில் விலக்கு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

மேலும், மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் 7 தமிழர்களின் விருதையும் தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இன்று தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி காந்தி இது குறித்து தனது நிலைப்பாட்டை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நாகர்கோவிலில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார்.

நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் இன்று மாலை 3 மணி அளவில் இந்த பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி சிறப்புரையாற்றுகிறார்.

மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளாக உள்ள அனைத்து தலைவர்களும் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.

முன்னதாக இன்று காலை சென்னை வந்த ராகுல் காந்தி, கலோரி மாணவிகளிடம் நேரடியாக உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி அவர்கள் கூறியதாவது,

* எங்களது ஒரே இலக்கு பிரதமர் மோடியை தேர்தலில் வீழ்த்துவது தான்.

* காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது ரபேல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.

* 7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

* தன்னாட்சி அமைப்புகளின் உரிமையை பறிக்கும் வகையில் பாஜக அரசு செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கபடும்மா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழகத்தில் நீட் விவகாரத்தில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டுமே தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு தீர்வு காண தற்போதைய மத்திய அரசே முயற்சிகள் எடுத்துவரும் நிலையில், அதேயே தான் நாங்களும் செய்வோம் என்று கூறியிருப்பது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அது சரி நீட் தேர்வு என்ற முறைக்கு வித்திட்டதே அன்றைய காங்கிரஸ் தலைமையில் அமைந்த மத்திய அரசு தானே. பின் எப்படி நீட் தேர்வு தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும். கடைசி வரை ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு, கனவாகத்தான் போகிறதா?.

தற்போதைய தமிழக அரசு, ஏழை மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி அடையும் அளவிற்கு, அவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். அல்லது தமிழக மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படவேண்டும் இது மட்டுமே ஒரே தீர்வாக இருக்கும். மத்தியில் யார் ஆட்சி அமைந்தாலும், தமிழகத்தில் நீட் தேர்வில் விலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை ராகுல் காந்தியின் பதில் நமக்கு உணர்த்துகிறது.