வலைதளத்தில் வலை எவ்வாறு வீசப்படுகிது.., எவ்வாறு பெண்கள் மயங்குகின்றனர்.!

இன்றுள்ள நவீன காலகட்டத்தில் மனிதர்கள் சமூக வலைத்தளங்களோடு ஒன்றிய வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவ்வாறு சமூக வலைத்தளத்தில் ஒன்றியிருக்கும் நபர்களை அதில் இருந்து வெளிவர செய்வது பெரும் கடினமான செயலாகிவிடுகிறது. எந்த நேரத்திலும் சிலர் சமூக வலைத்தளத்திலேயே தொடர்ந்து பயணிப்பதன் மூலமாக அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து விழிப்புணர்வு இருந்தும் வெளிவர முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த சமூக வலைத்தளங்களால் பலர் தங்களின் வாழ்க்கையையும் இழந்து வருகின்றனர். இந்த பிரச்சனைகள் பல இருக்க நாடக காதல்களில் விழுந்த பெண்களின் வாழ்க்கை எந்த பாதையில் செல்கிறது என்று தெரியாமலேயே அவர்கள் இருக்க., இது குறித்த பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்திய நபர்களை ஒரு குறிப்பிட்ட மையத்திற்குள் பல அரசியல் சூழ்நிலையால் தள்ளப்பட்டது நமது நாட்டின் பெரும் துயராக இருந்து வருகிறது.

இந்த பிரச்சனைக்கு சரியான தற்போதைய எடுத்துக்காட்டாக., பொள்ளாச்சியில் அப்பாவி இளம்பெண்கள் சுமார் 200 பேரின் வாழ்க்கையை சீரழித்த சம்பவம் கசப்பான உண்மையாகவுள்ளது. இந்த பிரச்சனை வரும் காலத்தில் ஒரு பாடமாக இருந்து கொண்டு., இது போன்ற பிரச்சனைக்கு பெண்கள் ஆளாகாமல் இருக்க வேண்டும். மேலும்., இது போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளான பெண்களின் பதிவுகள் சார்ந்த விஷயங்கள் பாதுகாக்கப்படவேண்டும்.

இந்த பிரச்சனை குறித்த விசாரணை மேற்கொண்டு அதனை அடிப்படையாக வைத்து பின்னாளில் பெண்கள் இது போன்ற பிரச்சனையில் சிக்காமல் இருக்க., அவர்கள் உபயோகித்த தந்திரங்களை வெளிப்படுத்தி., இது போன்று நடக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பெண் பாதுகாப்பாக இருக்க அல்லது விலகி இருக்க பெற்றோர்கள் மூலமாக காவல் துறையினர் விசாரணையுடன் தீர்வு காண வேண்டும் என்பதே தீர்வு.

இதற்கு அடுத்தபடியாக சமூக வலைத்தளங்களில் இது போன்ற கொடிய எண்ணம் கொண்டவர்கள் வலைகளை பெண்களுக்கு எவ்வாறு ஏற்படுத்துகின்றனர் என்பது குறித்து இனி காண்போம். பெண்கள் இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்களில் அதிகளவு ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். மேலும்., பெண்களின் பெயரிலேயே போலியான முகநூல் கணக்குகளையும் உபயோகம் செய்து அதனால் பெண்கள் சந்தித்த பிரச்சனையும் இந்த நேரத்தில் நினைவு கூறவேண்டியது…

பெண்கள் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சிகளை வைத்தே அவர்களின் குணத்தை அறிந்து., அந்த புகைப்படம் மற்றும் காணொளிகளுக்கு லைக்., லவ் என்று வலைகளை வீசுகின்றனர். மேலும்., அந்த பதிவிற்கான கருத்துக்களை பதிவு செய்து அவர்களிடம் பேச அல்லது அவர்களை பேச வைக்க முயல்கின்றனர். இதற்கு பின்னர் இது போன்ற தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு அவர்களிடம் இருந்து நட்பிற்கான அழைப்பு வரும் அல்லது இவர்கள் நட்பிற்கான அழைப்புகளை பதிவு செய்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக நடைபெறும் பேச்சு வார்த்தை தொடக்கத்தில் இருந்து பல பிரச்சனைகள் துவங்குகிறது.

இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்கு., பெண்கள் அவர்களுடைய புகைப்படங்கள் மற்றும் குடும்பத்தாரின் புகைப்படங்கள் பதிவேற்றுதலை தவிர்க்க வேண்டும். மேலும்., குடும்பங்களின் விவகாரத்தை பதிவிடுவது போன்ற பிரச்சனையை தவிர்க்க வேண்டும். உங்களின் முகநூலில் இருக்கும் 3000 நண்பர்களில் பெரும்பாலானோர் நீங்கள் அறியாத நபர்கள் மட்டுமே., ஆகையால் அவர்களிடம் பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

மேலும்., முகநூலில் செய்யப்படும் மாற்றங்களால் சில நேரம் தகவல்கள் திருடப்படலாம் என்ற எச்சரிக்கையும் வல்லுநர்களால் விடப்பட்டிருப்பதால்., அவ்வப்போது நமது சமூக வலைப்பக்கத்தை சோதனை செய்து கொள்வது., முகநூல் மூலம் உள்ளீடு செய்யப்பட்டுள்ள பிற செயலிகள் குறித்து சோதனை செய்துகொள்ளலாம். இணையத்தில் புதிதாக வந்தாலும்., இப்போது உபயோகம் செய்து கொண்டு இருந்தாலும் அனைவரும் நல்லவர்கள் என்று எண்ணுவது தவறு.

எந்த விதமான பிரச்சனையாக இருந்தாலும் உங்களின் பெற்றோரிடம் உடனடியாக தெரிவித்து அதற்கான தீர்வுகளை காணுங்கள்., உங்களின் பெற்றோர் உங்களிடம் பேச மறுத்தாலும் (பணி சூழல் காரணமாக)., சில தீவிர பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் ஆவேசமடைந்தவது நடந்ததை தெளிவாக தெரிவியுங்கள். இல்லையேல் காவல் நிலையத்திலோ அல்லது மகளீர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செயல்படும் பெண்கள் பாதுகாப்பு மையத்தின் அலைபேசி 181 என்கிற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தெரிவியுங்கள். அது உங்களையும் உங்களை போன்ற பெண்களையும் பாதுகாக்கும்.