என் மனைவியை அவர் அபகரித்து விட்டார்… வெளிநாட்டில் வசிக்கும் இந்திய இளைஞர் கண்ணீர்…

கென்யாவில் வசித்து வரும் இந்தியரின் மனைவியை அழைத்து கொண்டு உள்ளூர் நபர் ஓடிபோய்விட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Makindu கவுண்டியை சேர்ந்தவர் எல்விஸ். இவர் நாட்டின் தலைநகர் Nairobi-வில் வசித்து வரும் இந்தியரான யாசின் என்பவரிடம் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் தனது மனைவியுடன் எல்விஸ் ஓடிபோய்விட்டதாக யாசின் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து யாசின் கூறுகையில், என் மனைவியை என்னிடமிருந்து எல்விஸ் அபகரித்துவிட்டார், என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவர் ஆபத்தில் இருக்கலாம்.

அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் என்னிடமோ அல்லது பொலிஸ் அதிகாரிகளிடமோ தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.