பொள்ளாச்சியில் பணிக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் சுமார் 100 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து, ஆபாச படமெடுத்து மிரட்டி நகை மற்றும் பணங்கள் பறித்தும், பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது.
இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக முதலில் சரிராஜா, சதீஸ் மற்றும் வசந்தகுமார் என்பவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது.
அந்த காமக்கொடூர மிருக கும்பலிடம் இளம்பெண் ஒருவர் சிக்கி கதறும் வீடியோ வெளியானது. இதை கண்ட அனைவரின் உள்ளத்தையும் பதை பதைக்கும் வகையில் அந்த வீடியோ இருந்துள்ளது.
அந்த கொடூர கும்பலுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டுமென நடிகர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றா பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். சிபிசிஐடிக்கு மாற்றுவது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்திருந்தது.
இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரித்துள்ளது உயர்நிதிமன்றம். மேலும் பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில், அடுத்த கட்ட நடவடிக்கையாக, தமிழக உள்துறை அமைச்சகம் சிபிஐக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டுள்ளது.