மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் மும்பையை சார்ந்த சாந்தகுருசை கல்லூரியில் இரண்டு மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத்தை சார்ந்த ஜனம் போர்வால் என்கிற 20 வயதுடைய இளைஞரின் பழக்கமானது சமூக வலைதளத்தின் மூலமாக கிடைக்கப்பெற்றுள்ளது.
இவர்களின் பழக்கத்தை உபயோகம் செய்து கொண்ட கொடூரன்., தனது வக்கிர புத்தியின் மூலமாக பெண்களிடம் ஆசைவார்த்தையுடன் ஆபாச வார்த்தையையும் கூறி மாணவிகளை தனது வலையில் விழ வைத்து., அவர்களின் ஆடையை அவிழ்க்கச்சொல்லி அதனை அவர்களுக்கே தெரியாமல் பதிவு செய்துள்ளான்.
இந்த பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பெண்களுக்கு அனுப்பி வைத்து அவர்களை மிரட்ட துவங்கியுள்ளான். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள் உடனடியாக இந்த விஷயம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் விஷயத்தை தெரிவித்து புகார் அளித்தனர்.
இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வாலிபரை கைது செய்தனர். ஜனத்தின் மீது புகார் வந்திருப்பதை அறிந்ததை அடுத்து ஜனம் போர்வால் உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கண்பூருக்கு தப்பி சென்றுள்ளான். இதனை அறிந்த காவல் துறையினர் அங்கு சென்று அவனை அதிரடியாக கைது செய்தனர்.
அந்த வாலிபரிடம் மேற்கொண்ட விசாரணையில்., கடந்த 3 மாதங்களாக இளம் பெண்களுடன் சேட்டிங் செய்யும் சமயத்தில்., இவரின் மென்பொருள் தொழில்நுட்ப படிப்பினை பயன்படுத்தி வெளிநாட்டு அலைபேசியில் இருந்து அழைப்புகள் வருவது போல மற்றம் செய்து ஆபாச பதிவுகளை காட்சிப்படுத்தியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.