காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பகுதியில் வசித்து வருபவர் வசித்து வந்தவர் சிவகுமார். 47 வயது நிறைந்த இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சந்திரா.
இந்நிலையில் சமீபத்தில் மதுவுக்கு அடிமையான சிவகுமார் வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது வீட்டார்கள் சிவகுமார் குடிபோதையில் தவறி விழுந்து இறந்ததாக கூறியுள்ளனர். ஆனால் சிவகுமார் தாயார் மட்டும் அவரதுசாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் செய்துள்ளார்.இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் பிரேதபரிசோதனை அறிக்கையில், சிவகுமார் விஷம் கொடுக்கப்பட்டும், கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சிவகுமாரின் மனைவி சந்திரா மீது சந்தேகம் அடைந்த போலீசார் இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது சிவகுமார் தனது சகோதரர் ராஜமாணிக்கத்தின் மனைவி மாரியம்மாளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், சந்திராவும் மாரியம்மாளும் சேர்ந்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தும், அவர் மயங்கியநிலையில் இருந்தபோது கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரியவந்தது.
பின்னர் மதுபோதையில் சிவகுமார் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக அனைவரையும் நம்ப வைத்து விட்டனர்.
இதனையடுத்து சந்திராவையும், மாரியம்மாளையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.