குழந்தையை விட்டுவிட்டு விமானத்தில் ஏறிய தாயால் புறப்பட்ட இடத்திலேயே விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள மன்னர் அப்துல் அஜிஸ் விமான நிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் நோக்கி ஒரு விமானம் புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண், திடீரென தனது குழந்தையை ஜெட்டா விமான நிலையத்தின் வரவேற்பு பகுதியில் விட்டுவிட்டு, விமானத்தில் ஏறி விட்டதாகவும், குழந்தையை கொண்டு வருவதற்காக விமானத்தை மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் பணிப்பெண்களிடம் கூறி அழுதுள்ளார்.
இந்த தகவல் உடனடியாக விமானிக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, விமானியும் ஜெட்டா விமான நிலையத்தை தொடர்புகொண்டு, நிலைமையை எடுத்துக்கூறி விமானத்தை அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார். இதனையடுத்து குழந்தையை தவறவிட்டு தாயின் நிலையை உணர்ந்து அந்த விமானம் தரையிறங்க ஜெட்டா விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.