ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தனது சர்ச்சைக்குரிய முழக்கங்களால் பிரபலமானவர் ஜூலி. அதைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு மக்களிடம் பெரும் வெறுப்பை சம்பாதித்தார். இருப்பினும் அவர் தொகுப்பாளினி, திரைப்பட நடிகை என பிஸியாகிவிட்டார்.
இந்நிலையில் ஜூலி அனிதா எம்பிபிஎஸ், அம்மன் தாயே, உத்தமி ஆகிய மூன்று படங்களில் நடித்தார். பின்னர் அவரை தனது காதலனுடன் இணைந்து மற்றொரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், போலீஸ் வாகனத்தின் மீது நடிகை ஜூலியின் கார் மோதியுள்ளது. இதனால் சென்னை எழும்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஜூலியின் காதலனான இப்ரான் போலீசாரை தாக்கியதாகவும், இதனை தொடர்ந்து 10 பேர் கொண்ட கும்பல் போலீசாரை தாக்கியதாகவும், தகவல்கள் வெளியாகின்றன.
ஏற்கனவே ஜூலியை வசைபாடி வரும் பல இணையதள பயன்பாட்டாளர்கள் இந்த விஷயத்தில் எவரோ செய்த தவறிற்கும் ஜூலியை வசைபாடினர். இதனால் மிகவும் மன வேதனைக்கு ஆளான ஜூலி மிகவும் கவலையுடன் தனது துயரத்தை வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த வீடியோவில், ஜூலி ,” நீங்கள் இப்படி திட்டும் அளவுக்கு நா என்ன தப்பு பன்னினேன்? என்ன கமண்டுல திட்ற யாரும் ஒரு பொய்கூட பேசினதே இல்லையா? சிலரோட தரமான கமெண்டுகளை பாத்து என்னோட சில தவறுகளை நா மாத்திக்கிட்டு இருக்கேன்.
ஆனா மோசமா கமெண்ட் போடாதீங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு. நானும் உங்க சகோதரி மாதிரி தான? என்ன ஏன் இப்படி திட்டுறீங்க? உங்க மோசமான வார்த்தையால வரும் கமெண்டுகளை பார்க்கும் போது மனசு வலிக்குது. ” என மிகவே உருக்கமாக பேசி வெளியிட்டுள்ளார்.
இதனால், மனம் திருந்தி சிலர் அவருக்கு ஆதரவாக கமெண்டுகளை இட்டு பதிலளித்துள்ளார். ஆனாலும், சிலர் அதிலும் அவரை வசைபாடியுள்ளனர்.
Julie give a police complaint n don’t waste time on loosers. Be brave bold. Let them die seeing ur growth. Don’t worry. God is there believe in god. They are cowards writing comments on Twitter most of them r psychotic ill brain b****these criminals need to be caught. #staystrong https://t.co/hkqa0pVN0P
— Gayathri Raguramm (@gayathriraguram) March 14, 2019
ஜூலியின் இந்த வீடியோவை பார்த்து நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்வீட்டர் பக்கத்தில், “ஜூலி இவர்கள் மேல் நீ புகாரளி. இவர்களுக்காக உனது நேரத்தை வீணாக்காதே. உன் வளர்ச்சியை பார்த்து அவர்கள் சாகட்டும். கடவுள் இருக்கிறார். அவரை நம்பு. இதுபோன்ற முறையற்ற கமெண்டுகளை விடுபவர்கள் சைக்கோக்கள். அவர்கள் போலீசின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும்.” என அவருக்கு ஆதரவாக தெரிவித்துள்ளார்.