பெண்களுக்கு முதுகுவலி ஏற்படுவதற்கான காரணம்???

பெரும்பாலான பெண்களுக்கு முதுகுவலி மற்றும் மூட்டு வலியானது அதிகளவு ஏற்பட்டு., இதனால் பலர் அவதியடைந்து வருகின்றனர். அந்த வகையில்., குழந்தைகளை பெற்றெடுத்த பெண்கள் பெரும்பாலும் இது போன்ற பிரச்சனையால் கடுமனையான அவதியடைந்து வருகின்றனர்.

இந்த பிரச்சனைக்காக பல விதமான தைலங்கள் மற்றும் மருந்துகள் என்று சாப்பிட்டும் தகுந்த பலனை தரவில்லை என்ற பட்சத்தில்., நமது முயற்சியிலேயே இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம். இந்த பதிவில் முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து காண்போம்.

இந்த நேரத்தில் ஏற்படும் முதுகு வலியானது நடு முதுகில் ஏற்படுகிறதா? அல்லது அடி முதுகில் ஏற்படுகிறதா? என்பதை முதலில் தெளிவாக நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தைகளை பெற்றெடுத்த பெண்களுக்கு., அவர்களின் முதுகில் ஊசியானது செலுத்தப்பட்டு இருக்கும்.

இந்த ஊசி செலுத்தியதன் விளைவாக இருக்கும் வலியானது நீண்ட காலத்திற்க்கோ அல்லது வாழ்நாளின் கடைசி நாட்கள் வரையோ இருக்கும் வாய்ப்புள்ளது. அறுவை சிகிச்சை மூலமாக குழந்தைகளை பெற்றெடுத்தால் அனஸ்தீஷியா தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக அதிகளவு நீர் மற்றும் பழச்சாறுகள்., உடலுக்கு குளிர்ச்சி நிறைந்த உணவுகளையே எடுத்துக்கொள்ளலாம்.

பெரும்பாலான ஆண்கள் நீண்ட நேர அல்லது நீண்ட தூரத்திற்க்கான இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வது உண்டு. அதனை போன்று நீண்ட நேரமோ அல்லது குறைந்த தூரம் தான்., இரு சக்கர வாகனத்திலேயே சென்று விடலாம் என்று எண்ணி செல்லாதீர்கள். தேவையான உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

இதுமட்டுமல்லாது வயிற்றில் இருக்கும் பிரச்சனையின் காரணமாக கூட சில நேரங்களில் கீழ் முதுகு பகுதியில் வலியானது ஏற்படலாம். பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தமும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. மேலும்., சிறுநீரகத்தில் இருக்கும் கற்களின் மூலமாக கூட சில நேரத்தில் முதுகுவலியானது ஏற்படலாம்.

இதற்கு அடுத்தபடியாக வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனை இருக்கும் சமயத்திலும் முதுகுவலி ஏற்படும். முதுகில் ஏற்படும் கூனலின் காரணமாக நிற்பது., நடப்பது மற்றும் உட்காரும் சமயத்திலும் சில பிரச்சனைகள் ஏற்படலாம். திடீரென குனிந்து நிமிர்வது மற்றும் அதிக உடல் எடையானது உடல் பருமானிற்கு காரணமாக அமைகிறது.