தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் ஜெய ஸ்ரீ. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.இவருக்கு பொது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவரது தந்தை ஐயப்பன் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து அவரது இறுதிச்சடங்கு நிகழ்வுக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நேற்று 12 ஆம் வகுப்பு வேதியியல் தேர்வு நடைபெற்ற நிலையில் ஜெயஸ்ரீ தனது தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்காமல், பள்ளிக்கு சென்று தேர்வு எழுதியுள்ளார்.
மேலும் ஜெயஸ்ரீ தேர்வெழுதி விட்டு வரும் வரை அவரது தந்தையின் இறுதி சடங்கு நடைபெறவில்லை.மேலும் அவருக்காக உறவினர்கள் காத்திருந்தனர். பின்னர் ஜெயஸ்ரீ வீடு திரும்பியவுடன் அவரது தந்தையின் இறுதிச்சடங்கு நடைபெற்றது.
மேலும் இதுகுறித்து ஜெயஸ்ரீ கூறுகையில், தான் நன்கு படித்து கணினி துறையில் சாதிக்க வேண்டும் என்பதே எனது தந்தையின் கனவு. அந்த கனவை நிறைவேற்றவே நான் இன்று தேர்வு எழுத வந்தேன் என அவர் கூறியுள்ளார்.