கடந்த சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் இளம் பெண்கள் சீரழிக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய வீடியோ வெளியானது.
அதில் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட இளம்பெண், அடியின் வலி பொறுக்க முடியாமல் அழும் காட்சிகள் காண்போர் மனதை ரணமாக்கியது.
அந்த வீடியோவின் பின்னணியில் உள்ள பொருட்கள் மற்றும் அங்கிருந்த அடையாளங்களை கொண்டு அது யாருடையை வீடு என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.
இவ்வளவு நாள் பண்ணை வீட்டில் வைத்து இளம்பெண்கள் சீரழிக்கப்பட்டதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அந்த வீடியோவில் இருந்தது திருநாவுக்கரசின் பூர்வீக வீடு என்பது தெரிய வந்துள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னப்பபாளையம் என்ற பகுதியில் அந்த வீடு அமைந்திருக்கிறது.
சுற்றிலும் குடியிருப்புக்கள் நிறைந்தும், திருநாவுக்கரசின் வீட்டில் இருந்து ஒரு அடி தொலைவிலேயே தொடர்ச்சியான வீடுகள் அமைந்திருந்தும் இது போன்ற கொடூர சம்பவம் எப்படி நடந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு வெளியான வீடியோவில் இருந்த தூண் போன்ற அமைப்பும், அங்கிருந்த பொருட்கள் மற்றும் கதவின் நிறம், அறையில் இருந்த புகைப்படங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை நடத்து திருநாவுக்கரசின் வீட்டில் என்பது உறுதியாகியுள்ளது.