மகனின் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு உயிரிழந்த 60 வயது தாய்!

தமிழகத்தில் மகனின் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு தாய் உயிரிழந்த சம்பவம் உறவின்ர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் போத்துராஜன். இவருக்கு கிருஷ்ணவேணி(60) என்ற மனைவியு, சங்கர்(34) என்ற மகனும் உள்ளார்.

பேத்துராஜ் இறந்துவிட்டதால், தாய் கிருஷ்ணவேணியை சங்கர் கவனித்து வந்துள்ளார். இருப்பினும் கிருஷ்ணவேனிக்கு மகனின் திருமணம் நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்து வந்ததால், மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார்.

இதற்கிடையில் அவருக்கு உடல் நிலையில் சரியில்லாமல் போயுள்ளது. இதனால் கிருஷ்ணவேணி மகனின் திருமணத்தை நடத்த உறவினர்களுடன் சேர்ந்து பெரிதும் முயற்சி செய்து வந்தார்.

அந்த முயற்சியின் பயனாக சங்கருக்கு பெண் பார்த்து நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று திருமணம் நல்லபடியாக நடைபெற்றது.

அப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணவேணி, மணமக்களை வாழ்த்தி மகிழ்ச்சி அடைந்தார். இதேபோல் ஏராளமான உறவினர்கள், நண்பர்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.

திருமண மண்டபத்தில் இருந்து மணமக்கள் உள்ளிட்டோர் மணமகன் வீட்டுக்கு வந்தனர். அவர்களை வரவேற்ற கிருஷ்ணவேனி, அதன் பிறகு புதுமண தம்பதிகளை மணமகளின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய சிறிது நேரத்தில் வீட்டின் படுக்கையிலே கிருஷ்ணவேணியின் உயிர் பிரிந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்ததும் அவரது மகன் சங்கர் தனது மனைவியுடன் விரைந்து வந்து கதறி அழுதார்.

அப்போது அங்கிருந்த உறவினர்கள், தனது உயிர் பிரிவதற்குள் மகனின் திருமணத்தை நடத்தி பார்க்க வேண்டும் என்பதற்காக தினமும் கடவுளிடம் வேண்டினார். அதன்படியே திருமணம் முடிந்தவுடன் உயிரிழந்துவிட்டார் என்று வேதனையுடன் கூறியுள்ளனர்.