பொள்ளாச்சியில் கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் கொடுமைகளில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர் காட்டுமிராண்டிகள். இந்த வழக்கில் வசந்தகுமார், செந்தில், சதீஷ், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.
இவ்வழக்கில் தொடர்புடைய பார் நாகராஜ் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அ.தி.மு.க-வைச் சேர்ந்த இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு, அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் இவரது டாஸ்மாக் கடையை மக்கள் அடித்து உடைத்துள்ளனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய பார் நாகராஜ், தன்னை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதால் பிறந்த குழந்தையின் முகத்தை கூட பார்க்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என பார் நாகராஜ் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அரசியல் மற்றும் பொது வாழ்வில் எனக்கு வேண்டாத சிலர் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் என்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர் என கூறியுள்ளார்.
எனக்கு தற்போது தான் திருமணமாகி குழந்தை பிறந்து 25 நாட்கள் ஆகின்றன. இப்படி ஒரு சம்பவத்தால் எனது குழந்தையின் முகத்தை கூட பார்க்க முடியாத நிலைமையில் உள்ளேன் என கூறியுள்ளார்.