நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னம்!

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. மேலும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் தொகுதி பங்கிட நிறை செய்தது. இந்த கட்சிக்கு எந்த தொகுதி மற்றும் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு இரண்டு, ஒரு நாட்களில் வெளியாக உள்ளது. இதனால் அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது.

இந்நிலையில் அங்கீகாரம் கிடைக்காத சில கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துவருகிறது. சமீபத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘டார்ச்லைட்’ சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டிருந்த மோதிரம் சின்னம் ஒதுக்கப்படாததால், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. இந்த முறையும் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் வழங்குமாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் ஆணையத்துக்கு அக்கட்சி கோரிக்கை வைத்து இருந்தார். ஆனால் அந்த சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. அதற்கு பதிலாக விவசாயம் சம்பந்தமான சின்னத்தை வழங்குமாறு நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது.

இதனை தொடர்ந்து சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.