உலகம் முழுவதும் முடங்கியது பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம்

உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற செயலிகளின் சேவை சில பயனாளர்களுக்கு தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளம் பேஸ்புக். அதிகாலை கண் விழிப்பதிலிருந்து, இரவு தூங்கும்வரை பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி வியாபாரம், தேர்தல் பிரசாரம் செய்திகள், வியாபாரங்கள், விளம்பரங்கள் என எல்லாமும் கிடைக்கும் மிகப்பெரிய சந்தையாக பேஸ்புக் உள்ளது.

இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் நேற்று இரவு முதல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர், வாட்ஸ் அப் ஆகியவற்றின் இயக்கத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. பேஸ்புக்கில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், புதிய பதிவுகளை பதிவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பேஸ்புக் நிறுவனம், பாதிக்கப்பட்ட சேவையை சீரமைக்க மு‌யற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட சேவை விரைவில் சரி செய்யப்படும் என்றும் இது சைபர் தாக்குதலால் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளது. பேஸ்பு,க், இன்ஸ்டாவில் பிரச்னை என்றதும் டிவிட்டர் பக்கம் குவிந்துள்ள இணையவாசிகள் #instagramdown, #FacebookDown என்ற ஹேஸ்டேக்குகளில் கருத்துகளை தெரிவித்தும், கிண்டல்செய்தும் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.