வயிற்று வலியால் துடித்த முதியவருக்கு சோதனையில் வந்த வேதனை.!

மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்த 75 வயதுடைய முதியவர் மும்பையில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களாகவே கடுமையான அடிவயிற்று வலியானது இருந்து வந்துள்ளது.

இதனால் நீண்ட நாட்கள் சாதாரண பிரச்சனையாக இருக்கும் என்று நினைத்து மாத்திரைகளை மட்டும் சாப்பிட்டு வந்த நிலையில்., குறிப்பிட்ட சமயத்திற்கு மேல் தாங்க முடியாத வலியானது ஏற்பட்டள்ளது.

இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு சென்று வயிற்று வலியால் அவதியடைந்து வருவது குறித்து மருத்துவர்களிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு சோதனை செய்தனர்.

அந்த சோதனையில் அவருக்கு சிறுநீரகத்தில் சுமார் 552 கற்கள் இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அவருக்கு உடனடியாக லேசர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு சிறுநீரகத்தில் இருந்த கற்கள் அனைத்தையும் அகற்றினர்.

இந்த விஷயம் குறித்து அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் லோகேஷ் கூறியதாவது., முதியவரின் சிறுநீரகத்தை அடைத்திருந்த கற்கள் அனைத்தையும்., லேசர் சிகிச்சையின் மூலமாக அகற்றியுள்ளோம். இப்போது அவர் உடல் நலத்துடன் இருக்கிறார்., எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்தார்.