செவ்வாய் கிரகத்திற்கு முதலில் இவர்களைத்தான் அனுப்புவோம்.! நாசா அதிரடி.!!

சூரிய மண்டலத்தில் உள்ள செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் ஏதேனும் உயிர் வாழ முடியுமா? என்பது குறித்த ஆய்வில் தீவிர முனைப்புடன் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா நடத்தி வருகிறது.

இந்த ஆராய்ச்சியில் வெற்றி கொடியை எப்படியாவது நாட்டிவிட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில்., செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பி வைத்து சோதனை செய்வதற்கு திட்டமிடப்பட்டு., அதற்காக பயிற்சியும் அளித்து வருகிறது.

இந்த சூழலில் நாசாவின் மூத்த அதிகாரியான ஜிம் பிரிடன்ஸ்டீன் கலந்து கொண்ட அலைவரிசை நிகழ்ச்சியில் பேசிய சமயத்தில்., செவ்வாய் கிரகத்தின் பணிகள் குர்தா பல்வேறு தகவலை தெரிவித்தார்.

அந்த சமயத்தில்., விரைவில் அமெரிக்க நாட்டில் இருந்து விரைவில் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் வேளையில்., செவ்வாய் கிரகத்திற்கு பெண் பயணிப்பார் என்று தெரிவித்தார்.

மேலும்., அமெரிக்காவை சார்ந்த இரண்டு பெண்களை நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பவுள்ளதாக தெரிவித்ததை அடுத்து., கேட்கப்பட்ட பிற கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.