பூட்டிய வீட்டுக்குள் தாயுடன் தூக்கில் தொங்கிய பெண் இன்ஜினியர்!

சென்னை கொளத்தூர் அகத்தீஸ்வரர் தெருவை சேர்ந்தவர் மாலதி. இவரது கணவர் ரமேஷ். அவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே விவாகரத்து செய்து மாலதி மற்றும் பிள்ளைகளை தனியாக விட்டு சென்றுவிட்டார். இவர்களுக்கு ராஜ்குமார் என்ற மகனும், ஷர்மிளா மகளும் உள்ளனர். 22 வயது நிறைந்த ஷர்மிளா இன்ஜினியரிங் படித்துவிட்டு தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த இருதினங்களாக மாலதியின் வீடு பூட்டியே கிடந்துள்ளது. மேலும் சர்மிளா மற்றும் மாலதி வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.

இந்நிலையில் நேற்று அவர்களது வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

வீட்டின் உள்ளே மாலதியும், ஷர்மிளாவும் அழுகிய நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் பிணமாக தொங்கி உள்ளனர். மேலும் வீட்டின் கண்ணாடி ஜன்னலில் எங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை நாங்கள் வீட்டுக்கு கொடுத்த முன்பணத்தை வாங்கி அத்தையிடம் கொடுத்து விடுங்கள் என ஷர்மிளா எழுதி வைத்திருந்தார்.

பின்னர் போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக தீவிர மேற்கொண்ட விசாரணையில் மாலதியின் மகன் ராஜ்குமார் பெங்களூரில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து உயிரிழந்தார். இந்த மனத்திலேயே மாலதி மற்றும் சர்மிளா இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்கள் என கூறப்படுகிறது.

மேலும் இவர்களது மரணத்திற்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.