ஆந்திரபிரேதேசம் மாநிலத்தில் இருக்கும் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பில்லிக்குண்டலப்பள்ளியைச் சார்ந்தவர் வினோத்குமார். இவர் விவசாயியாக இருந்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் புவனேஸ்வரி. கடந்த பிப்ரவரி மாதத்தில் 26 ம் தேதியன்று இவருடைய 6 மாத குழந்தையை வீட்டில் தூங்க வைத்துள்ளனர். குழந்தை உறங்கியதும் இருவரும் பணிக்காக விளை நிலத்திற்கு சென்றுள்ளனர்.
பின்னர் மீண்டும் இல்லத்திற்கு திரும்பிய சமயத்தில் குழந்தை அங்கிருந்த பிளாஸ்டிக் கேனில் இறந்து பிணமாக மிதந்தது. இதனையடுத்து குழந்தையின் உடலை கண்டு கதறியழுத பெற்றோர்கள்., விளை நிலத்திற்கு சென்ற சமயத்தில் குழந்தையை மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
அந்த விசாரணையில்., பெற்ற தாயே குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து அவரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில்., பில்லிக்குண்டலப்பள்ளியைச் சார்ந்த நாகராஜ் மற்றும் ராஜம்மாவின் மகள் புவனேஸ்வரி என்பதும்., அங்குள்ள எகுவமெதவாடா பகுதியை சார்ந்த வினோத்குமார் என்பவரை புவனேஸ்வரி காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதை அடுத்து., மகளை காணவில்லை என்று புவனேஸ்வரியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே., இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு., வினோத்குமாரை கைது செய்தனர். சிறைவாசத்திற்கு அடுத்தபடியாக புவனேஸ்வரியை திருமணம் செய்து கொண்ட அவர்., குடிசை இல்லத்தில் தங்களின் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில்., புவனேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில்., அதிக பாசத்தை தனது மூத்த மகனின் மீது வினோத்குமார் வைத்துள்ளார். இவரின் இரண்டாவது மகன் பிறந்த நிலையில்., அந்த குழந்தையின் மீது எந்த விதமான பாசமும் வைக்கவில்லை. மேலும்., என்னையும் கவனித்துக்கொள்ளாமல் இருந்தார். இதனால் ஏற்பட்ட மன வேதனையில்., கடந்த 6 மாதத்திற்கு முன்னதாகவே இளைய மகனை கொலை செய்யும் நோக்கில் திட்டமிட்டுள்ளார்.
அவரின் திட்டப்படி கடந்த 26 ம் தேதியன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வயலில் இருந்து வீட்டிற்கு வந்து குழந்தையை கொலை செய்துவிட்டு., பின்னர் ஒன்றும் தெரியாதது போல தண்ணீர் கேனில் முக்கி கொலை செய்து விட்டு வயலுக்கு சென்றுள்ளார்., பின்னர் கணவருடன் வந்து தனது நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.