சுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்?
ஒருபோதும் தனக்கு அறிமுகமானவர்களுடன் தீவிரவாத கருத்துக்களையோ, மதம் தொடர்பான கருத்துகளையோ பகிர்ந்து கொண்டிராத ஒரு நபர் எப்படி திடீரென 49 பேரைக் கொஞ்சமும் பதறாமல் கொலை செய்தார்?
அவுஸ்திரேலியாவின் New South Walesஇலுள்ள Grafton என்னும் பகுதியில் வளர்ந்தவர் இந்த பிரெண்டன்.
தன்னைக் குறித்து ஒரு சாதாரண வெள்ளையர் என்று கூறும் பிரெண்டன், ஒரு நடுத்தர, குறைந்த வருவாய் உள்ள குடும்பத்தில், அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஆங்கில பூர்வீகம் கொண்டவர்.
பிரெண்டனின் தந்தையான Rodney ஒரு விளையாட்டு வீரர். 49 வயது இருக்கும்போது புற்றுநோயால் அவர் இறந்துபோனார்.
பிரெண்டனின் தாயும் சகோதரியும் இன்னும் அதே பகுதியில் வசிப்பதாக கூறப்படுகிறது. படிப்பில் பெரிய ஆர்வம் எதுவும் இல்லாத பிரெண்டன், டிஜிட்டல் கரன்சி ஒன்றில் முதலீடு செய்ததில் கிடைத்த பணத்தை வைத்து பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.
கடுமையாகவும், ஒழுங்காகவும் உடற்பயிற்சி செய்யும் பிரெண்டன், பின்னர் ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராகியிருக்கிறார்.
இந்த விவரங்களை தெரிவித்த அவரது உடற்பயிற்சி நிலைய மேலாளரான Tracey Gray என்பவர், அரசியல், மதம் தொடர்பாக எந்த விடயங்களையும் அவர் பேசியதில்லை என்கிறார்.
அதே நேரத்தில், அவர் பல நாடுகளுக்கு, அதுவும் முக்கியமாக ஐரோப்பா, தென் கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்ததாக தெரிவிக்கிறார் Tracey.
என்னைப் பொருத்தவரை, அந்த பயணங்களின்போதுதான் ஏதோ நடந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார் அவர்.
தனது முந்தைய பேஸ்புக் செய்தி ஒன்றில் தான் பாகிஸ்தான் சென்று வந்தது தொடர்பாக, பிரெண்டன், உலகிலேயே மிகவும் உண்மையான, இரக்க மனம் படைத்த மற்றும் விருந்துபசரணை செய்யும் மக்கள் பாகிஸ்தானியர்கள்தான் என்று குறிப்பிட்டிருந்தார்.
இலையுதிர் காலத்தில் hunza மற்றும் nagar பள்ளத்தாக்கின் அழகை அடித்துக் கொள்ளவே முடியாது என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்படி பேசிய ஒருவர், எப்படி இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்கினார், எப்படி இத்தனை உயிர்களை கொல்லத்துணிந்தார் என்பது புரியவில்லை.