பொள்ளாச்சி விவகாரத்தில் நடக்கும் உள்ளடி வேலை..? வெளியான திடுக்கிடும் தகவல்.!

பொள்ளாச்சி விவகாரத்தில் சுடுங்க, தூக்குல போடுங்கனு பல இடங்களில் போராட்டம் நடக்குது.

ஆனால் முறைப்படி விசாரணை நடந்து தகுந்த ஆதாரங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும். பல வழக்குகளில் நீதிமன்றம் அவசரப்பட்டு நிரபராதிகள் பலிகடா ஆக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது.

பொள்ளாச்சி வழக்கில் புகார் யாரும் கொடுக்காமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்கின்றனர் காவல்துறையை சேர்ந்த சிலர்.

இது குறித்து அவர்கள் பேசுகையில், போன்ல இருக்க வீடியோ அடிப்படைல ஒருத்தர கைது பன்னி வழக்கு போட்டா நாட்டுல உள்ள பாதிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் போன்ல ஆபாச படத்த வச்சிருபாங்க. அந்த பெண் யாருனே தெரியலனாலும், பரப்புனதா யாராவது வழக்கு கொடுத்தா நீங்களும் கைது செய்யபடலாம்..

அப்படி பன்னினா அது நியாயமா இருக்குமா..? அதனால எந்த புகாரும் இல்லாம யார் மேலையும் வீடியோ & கேள்வி செய்திகள வச்சி வழக்கு போட முடியாது.

அவங்களே ஒத்துகிட்டு 10 பெண்களோட பெயர் மற்றும் அடையாளங்கள சொன்னாலும் அந்த பொண்ணுக ஒத்துகிட்டு இவனுக மேல வழக்கு கொடுத்தா மட்டும் தான் கற்பழிப்பு வழக்கு போட முடியும்.

இதுவரை எந்த பெண்ணும் தன்னை கற்பழிச்சதா அவங்க மேல புகாரோ, வழக்கோ கொடுக்கல. பின்ன எப்படி பன்ன முடியும்னு நீங்களே சொல்லுங்க..
.
இப்படி அரசியல் ஆக்கி 24 மணி நேரமும் மீடியா நோட்டமிடும் ஒரு வழக்காக இதை மாத்தி நீங்க போராடிட்டு இருந்தா எப்படி ஒரு உண்மைலயே கற்பழிக்கபட்டு பாதித்த பெண் வழக்கு கொடுக்க முன் வருவாங்க..?
.
இதெல்லாத்தையும் விட முக்கியமான விஷயம் நக்கீரன்ல வந்தது என்ன வீடியோ..? அந்த வீடியோக்கள் எப்படி கிடச்சது..? அந்த வீடியோவுல உள்ள பெண் யார்..? குறித்த உண்மையான ஆதாரமும் இதுவரை இல்லை..

இதுக்கு மேல நீங்க உடனே நியாயம் வேணும், நடவடிக்கை எடுக்கனும்னு ரோட்டுல நின்னா நீங்களும் இந்த மீடியா பலி ஆன ஆடுகள் தான்.

இதனால் நாமளும் பாதிக்கப்பட்டு விடுவோம்னு. சீரழிஞ்ச பெண்கள் கூட போலீஸ் பக்கம் வந்து உண்மைய சொல்ல தயங்குறாங்க’ என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.