வாஸ்து சாஸ்திரப்படி யோகம் உங்கள் வீடு தேடி வர…???

வாஸ்து சாஸ்திரம் என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும்.

அந்தவகையில் வாஸ்து சாஸ்திரப்படி இங்கு சில வாஸ்து குறிப்புகள் உள்ளன. தற்போது அதனை பார்ப்போம்.

  • கடலில் இருந்து எடுத்த கிரிஸ்டல்களை (கிளிஞ்சல்) அதிக நேரம் வசிக்கும் அறையில் வைத்தால் எதிர்மறையாக எண்ணங்கள் மறையும். கிழக்கு பக்கமுள்ள அறையில் அதிக நேரம் வசிப்பதால் முக அழகு கூடும். கவர்ச்சியும் தரும்.
  • நான்கு பக்கமும் ஒரே அளவாக சதுரமாக இருந்தால் அவ்வீட்டில் வசிப்பவர்களுக்கு உடல்நலம் தரும்.
  • மேற்கு பகுதி உயரமானால் மேன்மை தரும். கடின உழைப்பு, தியாக மனப்பான்மை, ஆராய்ச்சி செய்யும் அறிவு, விஞ்ஞான கண்ணோட்டம், உயர்நிலை பெரும் யோகம் இவைகளை தரும்.
  • சூரியனின் ஒளிக்கதிர்கள் வீட்டின் எப்பகுதிகளிலாவது விழும்படி சன்னல், கதவுகளை அமைக்க வேண்டும். அப்பொழுதுதான் வீட்டில் வசிப்பவர்களுக்கு நோயின் எதிர்ப்பு சக்தி கூடி வரும். கிருமிகளால், பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பு குறையும்.
  • வீட்டின் சுற்றுப்புற சுவரின் மூலையில் எவ்விதமான கட்டிடமும் கட்டக்கூடாது. முக்கியமாக வடகிழக்கு, தென்மேற்கு மூலைகளை இணைத்து சிறிய கூடமோ கழிப்பறையோ கட்டக்கூடாது. அவ்விதம் கட்டினால் அந்த வீட்டின் உரிமையாளர் அதில் வசிக்க இயலாது. வாடகைக்கு விடும் சூழ்நிலை ஏற்படும்.