பெண்கள் சந்திக்கும் கூந்தல் பிரச்சனைகளில் ஒன்று தான் முடி வெடிப்பு. இதனால் கூந்தலின் வளர்ச்சி தடைப்படுகின்றது.
இதற்கு முக்கிய காரணம் தலைமுடிக்கு போதியளவு பராமரிப்பு இல்லாதது தான்.
துமட்டுமின்றி, அளவுக்கு அதிகமாக கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துதல், ஹேர் ட்ரையர், கூந்தலை வெப்பமாக்கும் அழகு சாதனப் பொருட்கள் போன்றவைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
முடிவெடிப்பை தடுத்து கூந்தல் வளர்சியை தூண்ட செய்யும் சில இயற்கை வைத்தியங்களைக் இங்கு பார்ப்போம்.
- நன்கு கனிந்த பப்பாளியை அரைத்து, அதில் தயிர் சேர்த்து கலந்து, கூந்தல் முழுவதும் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் ஷாம்பு போடாமல் அலச வேண்டும். இந்த முறையை தொடர்ந்து பின்பற்றினால், முடி வெடிப்பு நீங்கி, கூந்தல் நன்கு மென்மையாக இருக்கும்.
- அரை கப் பாலில், 1 டேபிள் ஸ்பூன் க்ரீம் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து அலச வேண்டும். இதனாலும் நல்ல தீர்வு கிடைக்கும்.
- விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை சரிசமமாக எடுத்துக் கொண்டு, கூந்தலில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, துணியால் தலையைக் சுற்றி, 30 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு அலசினால், முடி வெடிப்பிலிருந்து விடுபடலாம்.
- பீர் ஒரு சிறந்த அழகுப் பொருளும் கூட. அதிலும் பீரைக் கொண்டு தலைக்கு மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, நன்கு நீரில் அலசிட வேண்டும். இல்லாவிட்டால், பீர் நாற்றமானது அப்படியே இருக்கும்.
- ஒரு முட்டையின் மஞ்சள் கருவில், 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு அடித்து, அதனைக் கொண்டு தலையை மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலசினாலும், முடி வெடிப்பில் இருந்து விடுபடலாம்.
- 1/2 கப் உளுத்தம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை 1/2 கப் தயிர் ஊற்றி கலந்து, கூந்தலில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு, கூந்தலை அலச வேண்டும்.
- 1 டேபிள் ஸ்பூன் தேன், 1/2 கப் தயிர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, ஸ்கால்ப் மற்றும் கூந்தலில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, நீரில் நன்கு அலச வேண்டும்.
- ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனைக் கொண்டு தலையை மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து குளித்தால், கூந்தல் பட்டுப் போன்று இருப்பதோடு, முடி வெடிப்பும் போய்விடும்.
- அவகேடோவில் முடிக்கு தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. எனவே அவகேடோவை நன்கு மசித்து, ஈரமான கூந்தலில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.
- மயோனைஸை கூந்தல் முழுவதும் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.