தமிழ் சினிமாவில் அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நாயகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்த இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.
அவர் கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது அப்படத்தின் நாயகி சாயிஷாவுடன் காதல் ஏற்பட்டதாகவும் அவர்கள் வரும் மார்ச் மாதம் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியானது.அதனை தொடர்ந்து ஆர்யா வரும் மார்ச் மாதம் 9 மற்றும் 10 ந் தேதி சாயீஷாவை திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி, ஹைதராபாத்தில் ஆர்யா-சாயீஷாவின் சங்கீத் நிகழ்ச்சி மார்ச் 9 கோலாகலமாக நடைபெற்றது. மேலும் திருமணம் மார்ச் 10 ம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது.அதனை தொடர்ந்து ஆர்யா-சாயிஷாவின் திருமண வரவேற்பு சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடைபெற்றது.
திருமணம் முடிந்து கேக் வெட்டும்போது அங்கிருந்த விருந்தினர்கள், ‘ஹாப்பி பர்த்டே டூ யூ..’ என பாட துவங்கிவிட்டனர். அதை பார்த்த ஆர்யா-சயிஷாவே சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.