நம்மில் பெரும்பாலனோர் மேற்கொள்ளும் தவறான உணவு பழக்க வழக்க முறைகளின் காரணமாக நமது உடல் நலமானது பாதிக்கப்பட்டு., அதன் மூலமாக நெஞ்சு எரிச்சலானது ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை எதிர்கொள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் இஞ்சி மிட்டாயை வாங்கி உண்ணும் பழக்கத்தை வைத்திருப்போம். அந்த வகையில்., இஞ்சி மிட்டாயை வீட்டிலேயே தயார் செய்வது குறித்து இனி காண்போம்.
இஞ்சி மிட்டாய் செய்ய தேவையான பொருட்கள்:
இளம் இஞ்சி – 200 கி.,
பாகு வெல்லம் – 300 கி.,
கோதுமை மாவு – ஒரு தே.கரண்டி.,
ஏலக்காய் தூள் – ஒரு தே.கரண்டி.,
நெய் – 2 தே.கரண்டி..
இஞ்சி மிட்டாய் செய்முறை:
இஞ்சியின் தோலை சுத்தமாக நீக்கிவிட்டு மையாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். வெல்லத்தை பாத்திரத்தில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாகு போன்று காய்ச்ச வேண்டும்.
வெல்லமானது பாகாக மாறியவுடன்., அரைத்த இஞ்சியை சேர்த்து சிறிது நேரத்திற்கு கிளறி விட வேண்டும்.
பின்னர் சிறிதளவு தண்ணீரை சேர்த்து கலக்கி வைக்கப்பட்டு இருந்த கோதுமை கரைசலுடன்., நெய் மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து அனைத்தையும் சிறிது ஒன்று சேர்த்து சூடுபடுத்தி எடுக்க வேண்டும்.
பின்னர் தயாராக்கிய கலவையை துண்டாக போட்டு எடுத்தால் சுவையான மற்றும் உடலுக்கு உகந்த இஞ்சி மிட்டாய் ரெடி…!