காதலும், காமமும் இயற்கையே..! பிரபல இயக்குனர் ஆவேசம்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் பணிக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து, ஆபாச படமெடுத்து மிரட்டி நகை மற்றும் பணங்கள் பறித்தும், பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக முதலில் சபரிராஜா, சதீஸ் மற்றும் வசந்தகுமார் என்பவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இவர்களில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவன் தலைமறைவாகவே, கைதானவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு, திருநாவுக்கரசை தேடி வந்தனர். கடந்த 5 ம் தேதியன்று திருநாவுக்கரசை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர், திருநாவுக்கரசிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ந்து வெளியானது. கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்து தன்னுடன் பயிலும் சக மாணவிகளை மயக்கி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இந்த விஷயம் தொடர்பான பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும், அவர்களிடம் இருந்த காணொளி காட்சிகளில் மூன்று பதிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திருநாவுக்கரசு கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்தே தன்னிடம் பயிலும் மாணவிகளை காதல் வலையில் விழ வைத்து ஆபாச படம் எடுத்ததும், மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையானது நேற்று முன்தினம் முதலாக சி.பி.சி.ஐ.டி விசாரணை துவங்கியுள்ள நிலையில், சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் திருநாவுக்கரசின் பண்ணை இல்லம் மற்றும் அவனுடைய இல்லத்தில் அதிரடி சோதனை மற்றும் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் நவீன் மூடர் கூடம் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆனார். இந்த படத்தின் மூலமாக பல பொதுவுடமை கருத்துக்களை சொல்லி இருப்பார். தற்பொழுது பொள்ளாச்சி மாணவி பாலியல் வன்கொடுமையை எதிர்த்து தன்னுடைய கருத்தை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

அவர் பதிவு செய்தவை, காமஉணர்வு என்பது பாவச்செயல் அசிங்கம் என்று கற்பிப்பதால், பெண்கள் வஞ்சிக்கபடும்போது வெளியில் சொல்ல அஞ்சுகின்றனர். காதலும் காமமும் இயற்கையே. ஒருவனை நம்பி காரில் ஏறிச்சென்ற பெண் எந்தவிதத்திலும் குற்றமற்றவளே. அவளை எக்ஸ்ப்ளாய்ட் செய்த சைக்கோநரிகள் தண்டனைக்குறியவர்களே என்று பதிவிட்டு செய்துள்ளார்.