இளவரசர்கள் எடுத்த முக்கிய முடிவு!

பிரித்தானிய இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரி ஆகிய இருவரும் அரண்மனையில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

பிரித்தானிய இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரி ஆகிய இருவரும் அரண்மனையில் இருந்து வெளியேறி தனிக்குடித்தனம் செல்ல இருப்பதாக இதுவரை வெளியான தகவல்களை உலகம் நம்பவில்லை.

காரணம் இருவராலும் அந்த பிரிவை தாங்கிக்கொள்ள முடியும் என பிரித்தானிய அரச குடும்பத்தை ஆதரிக்கும் எவரும் கருதவில்லை.

ஆனால் வெளியான தகவல்கள் உண்மை எனவும், சகோதரர்கள் இருவரும் தனிக்குடித்தனம் செல்ல முடிவு செய்துள்ளதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை உறுதி செய்துள்ளது.

வியாழனன்று இருவரும் தனிக்குடித்தனம் செல்ல எலிசபெத் ராணியார் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருவரது திருமணத்திற்கு பின்னரே பிரச்னைகள் தலைதூக்கியதாகவும், அரண்மனையில் மருமகள்கள் வந்து சேர்ந்ததே பிரச்னைகளுக்கு எல்லாம் முக்கிய காரணம் எனவும் உறுதிப்படுத்தாத தகவல்கள் முன்னர் வெளியாகியிருந்தன.

இளவரசர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தாருடன் வெளியேறுவதால் அரண்மனையில் செயல்பட்டுவந்த அலுவல்கள் அனைத்தும் இனி தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இல்லங்களில் வைத்து இளவரசர்கள் முன்னெடுப்பார்கள் என கூறப்படுகிறது.

மேகன் மெர்க்கல் இளவரசர் ஹரியை திருமணம் செய்துகொண்ட பின்னரே இளவரசர்கள் இடையே பிரச்னை பூதாகரமானது என கூறப்படுகிறது.

ஆனால் கடந்த ஓராண்டு காலமாக இந்த விவகாரம் தொடர்பில் பக்கிங்ஹாம் அரண்மனை வட்டாரம் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

இந்த வாரம் வியாழனன்று அரண்மனை அதிகாரிகள், இளவரசர்கள் பிருந்து செல்வது தொடர்பில் உறுதி செய்துள்ளனர்.

இளவரசர் ஹரி திருமணம் செய்து கொண்ட பின்னர் வில்லியம் கேட் தம்பதிகளுடனே குடியிருந்து வந்துள்ளார்.

இதனிடையே இரு தம்பதிகளுக்கும் இடையே கருத்துவேறுபாடு தலைதூக்கிய நிலையில், எலிசபெத் ராணியார் இரு தம்பதிகளையும் தனிக்குடித்தனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டில் இருந்தே இளவரசர்கள் இருவருக்கும் தனித்தனியா அலுவலகங்கள் செயல்பட்டு வந்துள்ளன.

மட்டுமின்றி, தனிக்குடித்தனம் செல்ல முடிவு செய்துள்ள நிலையிலும், இளவரசர்கள் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருப்பதாக அரண்மனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.