விலைச்சூத்திரத்தின் அடிப்படையில் பால்வின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் சேவை அதிகாரசபை அனுமதியளித்துள்ளது.
விலைச்சூத்திரத்தின் அடிப்படையில் ஒரு கிலோ கிராம் பால் மா பக்கெட் ஒன்றின் விலையை 60 ரூபாவாலும் 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலையை 25 ரூபாவாலும் அதிகரிக்க நுகர்வோர் சேவை அதிகாரசபை அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில், இறக்குமதிசெய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால் மா பக்கெட் ஒன்றின் விலை 920 ரூபாவாகவும் 400 கிராம் பால் மா பக்கெட் ஒன்றின் விலை 370 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.