கோவை அருகே 7 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த தனது 17 வயது மகனை காக்க, திமுக பிரமுகர், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்க்கு மிரட்டல் செய்து இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ரவிச்சந்திரன், இவர் அம்மாவட்டத்தின் திமுக ஆதி திராவிடர் துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். மேலும் இவர் கவுசிலருக்கு போட்டியிட்டு தோல்வியும் அடைந்துள்ளார்.
இந்நிலையில், இவரின் 11 ஆம் வகுப்பு படிக்கும் மகன் கவின் கடந்த 12 ஆம் தேதி அன்று, அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை (பாதுகாப்பு கருதி பெயர் குறிப்பிடவில்லை) அவரின் வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
பள்ளிக்கு சென்ற மகளை காணவில்லை என்று சிறுமியை அக்கம் பக்கத்தில் தேடிய போது, எதிர்வீட்டின் கதவை தட்டி திறக்கவே, அங்கு கவின் நின்று கொண்டிருக்க, அந்த சிறுமி கட்டிலுக்கு கீழ் அழுதுகொண்டே பயத்தில் இருந்துள்ளது.
தாயை கண்ட அந்த சிறுமி விஷியத்தை சொல்ல, உடனே அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது, கவினின் தந்தை, அந்த தாயிடம் இது சம்மந்தமாக காவல் துறைக்கு புகார் அளிக்க வேண்டாம் என்று, மிரட்டும் தோணியில் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த மிரட்டலுக்கு பயம் கொள்ளாத அந்த சிறுமியின் தாய் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் அளிக்கவே, புகாரின் அடிப்படையில், கவின் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
கொடூர சிறுவன் கவின், அந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததில், அந்த சிறுமிக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுமிக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அந்த சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.