தமிழ் சினிமாவில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷால். இதைத்தொடர்ந்து அவர் பல வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார்.
இத்துடன் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவராக பொறுப்பு வகிக்கும் விசைகளும் நடிகை வரலட்சுமியும் காதலிப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில், வரலக்ஷ்மி எனக்கு நல்ல நண்பர் என்று கூறி பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்பவரை காதலிப்பதாகவும், அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெறும் எனவும் அறிவித்தார். மேலும் அனிஷாவும் அவர் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார்.
இந்நிலையில் இன்று ஐதராபாத்தில் விஷாலுக்கும், அனிஷாவிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.