வால்நட் நல்ல வகை கொழுப்புகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.
நட்ஸில் பி- குரூப் வைட்டமின்கள், வைட்டமின் ஈ, கால்சியம், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், ஆக்ஸிஜனேற்ற கனிமங்கள்(செலினியம், மாங்கனீஸ்) போன்றவை உள்பட பலவிதமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
இது எலும்புகளில் கால்சியத்தை தங்க வைத்து, உடலின் முக்கிய பாகங்களை வலுப்படுத்தும் கொலாஜன் தொகுப்பை வீரியப்படுத்த வால்நட்ஸ் உதவுகிறது.
அதுமட்டுமின்றி அதிக அளவில் இருக்கும் புரத சத்துக்கள் உடலுக்கு ஊட்டம் கொடுத்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ளும்.
இவ்வளவு சத்துக்கள் நிறைந்த வால்நட்ஸை தினமும் 5 சாப்பிடுவதனால் உடலுக்கு பல்வேறு வகையிலான நன்மை அளிக்கின்றது. பலவகையான நோய்களை அடியோடி அழிக்க உதவுகின்றது.
இப்போது ஒருவர் தினமும் 5 வால்நட்ஸை சாப்பிடுவதால், உடலினுள் நிகழும் அற்புதங்கள் என்னவென்று பார்ப்போம்.
- உடல் எடையைக் குறைக்க நினைப்போர் வால்நட்ஸில் உள்ள பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதுடன், கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டத்தையும் குறைக்கும்.
- வால்நட்ஸில் உள்ள அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள், மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். இதனை ஒருவர் தினமும் சாப்பிட்டால், மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான அல்சைமர் நோய் வருவதைத் தடுக்கும்.
- வால்நட்ஸில் இருக்கும் ஃபேட்டி அமிலங்கள், புரோட்டீன், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய கனிமச்சத்துக்கள், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும்.
- ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள், மோனோ-அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் நிறைந்த வால்நட்ஸ், உடலில் நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தினமும் வால்நட்ஸை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
- வால்நட்ஸில் உள்ள பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். ஆகவே இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், தினமும் வால்நட்ஸ் சாப்பிடுங்கள்.
- சர்க்கரை நோயாளிகள் வால்நட்ஸை தினமும் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோ-அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவும்.
- வால்நட்ஸில் இருக்கும் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள் அல்லது ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள், உடலால் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரிக்க உதவும். இதனால் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.
- கனிமச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள் நிறைந்த வால்நட்ஸ், உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவும். எனவே தொப்பையைக் குறைக்க நினைப்போருக்கு இது மிகச்சிறந்தது.
- வால்நட்ஸில் உள்ள மெலடோனின் என்னும் பொருள், தூக்கத்தைத் தூண்டும். எனவே தூக்கமின்மை பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், வால்நட்ஸை தினமும் சாப்பிட, இரத்தத்தில் மெலடோனின் அளவு அதிகரித்து, இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
- வால்நட்ஸை தினமும் சாப்பிட்டால், அதில் உள்ள பயோடின் என்னும் வைட்டமின் பி7, தலைமுடியின் வலிமையை அதிகரித்து, தலைமுடி உதிர்வதைக் குறைத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திப்பவர்கள், வால்நட்ஸை சாப்பிடுங்கள்.
- வால்நட்ஸ் விந்தணுக்களின் தரத்தை அதிகரிப்பதுடன், விந்து இயக்கம் மற்றும் விந்தணுவின் உருவகம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. ஆகவே தான் ஆண்கள் தினமும் 5 வால்நட்ஸை சாப்பிடுவது நல்லது.
- வால்நட்ஸில் வைட்டமின் பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. ஆகவே இதை தினமும் சாப்பிடும் போது, அது சருமத்தில் சுருக்கங்கள் வருவதைத் தடுத்து, ப்ரீ ராடிக்கல்களிடமிருந்து சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்.
- வால்நட்ஸ் கணைய புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கின்றது. ஆகவே புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபட வேண்டுமானால், தினமும் 5 வால்நட்ஸை தவறாமல் சாப்பிடுங்கள்.
- வாழ்நாளின் அளவை நீட்டிக்க தினமும் 5 வால்நட்ஸை சாப்பிடுங்கள். இதுவே உயிரைப் பறிக்கும் பல நோய்களின் அபாயத்தைக் குறைத்து, வாழ்நாளை நீட்டிக்கும்.
- கர்ப்பிணிகள் வால்நட்ஸை சாப்பிட்டு வந்தால், அது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுவதோடு, உணவுகளால் ஏற்படும் அழற்சியையும் குறைக்கின்றது. மேலும் வால்நட்ஸ் குழந்தையின் குடல் வளர்ச்சிக்கு உதவும்.