கண்ணீரில் மூழ்கிய யாழ்…

போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்குச் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ‘நீதிக்காய் எழுவோம்’ மாபெரும் மக்கள் பேரணி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பித்த இந்தப் பேரணி முற்றவெளி வரை இடம்பெறுகின்றது.

இந்தப் பேரணிக்கு தமிழ் மக்கள் பேரவை, தமிழர் விடுதலைக் கூட்டணி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி., புளொட் மற்றும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு என்பன முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன.

அத்துடன் பொது அமைப்புகளும் இந்தப் பேரணிக்குத் தமது ஆதரவை வெளியிட்டுள்ளன.

இந்த எழுச்சிப் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டுள்ளனர்.